மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் நகரில் மாணிக்க ஆசாரி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா தூக்கத்தில் லைட்டின் ஸ்விட்சை அழுத்தி உள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.