சாலையோரம் மீட்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை முன்பு நோய்வாய்ப்பட்டு ஒரு பெண் சாலையோரம் வசித்து வந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ள பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் மலையரசி என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.