Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு….. பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுநாராயணபுரம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுளா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |