Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு….. கணவனின் கொடுர செயல்…. போலீஸ் வலைவீச்சு…..!!

குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நவம்பர் 13  – ஆம் தேதியன்று நிலத்தில் உள்ள கொட்டகையில் இருந்த வளர்மதிக்கும், துரைராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துரைராஜ் விறகு கட்டையால் வளர்மதியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் வளர்மதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வளர்மதியை  பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளர்மதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துரைராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |