வீட்டின் மாடியில் இருந்து பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியின் அடுத்துள்ள திருவேங்கடபுரத்தை சேர்ந்த இந்துமதி என்பவர் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கடந்த இரண்டாம் தேதி எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மேல் சிகிச்சையின் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.