Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்…. திடீரென பெண் செய்த செயல்… அதிர்ந்து போன மக்கள்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திசையன்விளையில் தாங்கள் வசித்து வரும் இடத்தை தற்போது சிலர் தங்களுடைய நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினார்.

மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் இசக்கியம்மாள் என்றவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷயத்தை எடுத்து குடித்துவிட்டு கீழே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இசக்கியம்மாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Categories

Tech |