Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுக்கு கல்வி இல்லை… பிள்ளை மட்டும் பெத்துக்கணும்… டோட்டலாக மாற்றிய திராவிடம்!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இது பேரறிஞர் அண்ணாவின் சீரமைக்கப்பட்ட மண். கலைஞசரால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள்,  எங்களுடைய மக்கள். புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாரும் தமிழர்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். சனாதனத்தை பரிந்து பேசுறான். மைக் புடிச்சு பேசுறான். நாம சும்மா இருக்கோம். அது என்னென்னே தெரியல.

பேராசிரியரே, தந்தை பெரியார்… எல்லா தமிழனும் இவ்வளவு அடக்க படுகின்றனே, சமஸ்கிருதம் படித்தவன் தான் டாக்டர் படிக்கிறான். இருக்கின்றதா ? இல்லையா ? அதை நாம் முறியடித்து இருக்கின்றோம். சமஸ்கிருதம் படித்தவர் தான் மருத்துவம் படிக்க முடியும். நமக்கு யார் சமஸ்கிருதம் யார் சொல்லிக் கொடுப்பா ?  இன்னைக்கு நம்ம வீட்டு பிள்ளைங்க, எத்தனை பிள்ளைங்க மருத்துவராகி இருக்கோம்.

பெண்களுக்கு கல்வி கிடையாது. உனக்கு பிள்ளை பெத்துகின்ற வேலை தான். நீங்கள் எல்லாம் படிக்க கூடாது. தாழ்த்தப்பட்டவனுக்கு கல்வி கிடையாது. பிற்படுத்தப்பட்டவனுக்கு கல்வி கிடையாது. நீங்கள் எல்லாம் கோவிலுக்குள் நுழையக்கூடாது…  திருச்செந்தூரில் வெளியிலிருந்து கோபுரத்தை பார்த்து வணங்கி விட்டு,  போய்டனும்.  யாராயிருந்தாலும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாத்துக்கும் அதே நிலைமை தான் வைத்திருந்தார்கள்.

அந்த நிலைமை எல்லாம் மாத்தியது யாரு? நீதிக்கட்சி, திராவிட கழகம், இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம். அதை யாரும் மறுக்க முடியுமா ? இன்னைக்கு வந்துட்டு,  பழைய காலத்தில் நாம தூக்கி எறிந்த சனாதானத்தை நீ ஆதரித்து பேசுகிறாயே என அண்ணாமலையை விமர்சனம் செய்தார். திராவிடம் தமிழகத்தில் இருந்த அடக்குமுறையை மொத்தமாக மாற்றியதை குறிப்பிட்டு அமைசர் பேசினார்.

Categories

Tech |