குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
ஜார்கண்டை சேர்ந்தவர் குந்தன் குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து என்னும் பகுதியில் ஒரு தனியார் நூற்பாலையில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் குடியகுமாரி. இதனிடையே கணவன் மனைவிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் குடியகுமாரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குந்தன் குமார் வேலைக்கு சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்துள்ளார் குடியகுமாரி. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பழனி சாமிநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.