கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ? கணவனால் ஒரு மனைவி விருப்பமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார் என்றால் ? அதன் மூலமாக கரு உருவாகிறது என்றால் இந்த கருவை கருகலைப்பு சட்டத்தின் கீழ் கலைப்பதற்கு அனுமதி இருக்கிறதா ? இல்லையா ? என்று இப்படி நிறைய டெக்னிக்கலான விஷயங்கள் எல்லாம் இருக்கிறது.
மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை கருவுற்றால் அதனை கலைப்பதற்கான அனுமதி, அதே போல சிறுமிகள் கருவுற்றால் அதனை கலைப்பதற்கான அனுமதி. கருவில் இருக்கக்கூடிய குழந்தை ஒருவேளை ஊனமுற்றதாகவோ அல்லது வேறு ஏதேனும் மெடிக்கல் காரணங்களுக்காக கரு கலைப்பு செய்ய வேண்டும் என்றால் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன ? உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான தீர்ப்பாக இது வழங்கப்பட்டு இருக்கின்றது.