சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது.
கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிராக ஐயப்பன் கோவில் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி பெண் உரிமையை நிலை நாட்டையே தீருவோம் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு விடாப்பிடியாக இருந்தது. இதுநாள் ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபட்டனர். இந்நிலையில் ஐயப்பன் கோவில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பல்வேறு சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் இதன் தீர்ப்பு நாளை வெளியாகிறது.