கிராமத்து பெண்கள் குடிக்கிறார்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். விஜய் அஜித் , சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இவர் சமீபத்தில் பெண்கள் குடிப்பது குறித்து பேசி ரசிகர்களின் விமர்சனத்துள்ளாகி உள்ளார். அதில் நான் போதும் போதும் என்ற அளவிற்கு குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன், இதனால் தற்போதுள்ள என் வாழ்க்கை நன்றாக இருக்கின்றது என்று தெரிவித்த ஸ்ருதி , இப்போது மதுவை தொடுவது கூட இல்லை என்றார்.
ஆண்கள் குடிப்பதில் கவலை இல்லை. அதே போல பெண்கள் குடிப்பதை தவறாக பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை. இப்போது கூட கிராமத்துப் பெண்கள் குடிக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.