டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு செல்வதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்க மாநிலத்தில் காணாமல்போன 76 குழந்தைகளை இரண்டரை மாதத்தில் மீட்ட பெண் தலைமை காவலர் சீமா டாக்காவுக்கு டெல்லி காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்து,
பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவர் டெல்லியில் சமாய்ப்பூர் பதலி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மீட்ட குழந்தைகளில் 56 குழந்தைகள் 7 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். இவருக்கு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.