மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூவலப்புரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் முட்டுதுறை என்று அழைக்கப்படும் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இங்கு தங்குவதற்கு இரண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் ஒன்று 15அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாகவும் மற்றொரு 5 அடி அகலம் 5 அடி நீளமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறைக்கு வெளியே உள்ள மரத்தில் துணிப்பைகள் தொங்கவிடப்பட்டுள்ளன அந்தத் துணிகளில் உள்ளே இருக்கும் பெண்களுக்கு தேவையான தட்டு, டம்ளர் சாப்பாடு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன இவற்றை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். அதோடு அந்த இடத்தில் இருக்கும் பெண்களை தொடுர்பவர்கள் குளிக்காமல் வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை.
தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி பல சாதனைகள் புரிந்து வருகின்றனர். ஏன் சங்க காலத்தித்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக, சிறந்த தலைமைப் பண்பு மிக்கவர்களாக வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படியான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆனால் பல தலைமுறைகளாக இதை நாங்கள் பின்பற்றி வருவதால் மேல் தவறு இருப்பதாக கருதவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்