Categories
தேசிய செய்திகள்

இனி வருமானத்திற்கு பிரச்சினையே இல்லை ….”4 விதமான கடன் உதவிகள்”…. பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க…!!

பெண்கள் பொருளாராதர ரீதியில் சிறந்து விளங்குவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி கொண்டுவந்துள்ள சில திட்டங்களை பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். மேலும் சுயமாகவே சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். வீட்டிலிருந்தபடியே சில பெண்கள் சுய தொழில் ஆரம்பித்து வெற்றியும் கண்டு வருகின்றனர். இவ்வாறு தொழில் தொடங்கும் பெண்களுக்கு அரசும், சில தனியார் வங்கிகளும், தனியார் அமைப்புகளும் சில திட்டங்களை செயல்படுத்தி அதன் கீழ் கடன்  உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறு பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில திட்டங்களின் கீழ் பெண்களுக்கான நான்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

மகிளா உதயம் நிதி மற்றும் மகிளா சம்ரிதி யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் பெண்கள் தங்களுடைய சிறு குறு தொழில்களை வீட்டிலிருந்தே தொடங்குவதற்கும், தொழில் நிறுவனம் அமைக்க விரும்புபவர்களுக்கு அந்நிறுவனம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் இந்த திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்களை கடனுதவி பெரும் பெண்கள் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

மகிளா சஷ்காதிகரன் திட்டம் மற்றும் Start scheme to crech ஆகிய திட்டங்களின் கீழ் பெண்கள் தங்களுடைய சொந்த – வாடகை வீடுகளிலோ அல்லது குத்தகைக்கு  எடுக்கப்படும் வேறு ஏதாவது ஒரு தனி இடத்திலோ குழந்தைகள் பராமரிப்பு மையத்தை தொடங்கினால், அந்த மையத்துக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கும், கிராமப்புற பெண்களின் வீடுகளில் செய்யும் வேளாண்மை இல்லாத தொழில்களுக்கும், இதர சிறுகுறு தொழில்களை முன்னேற்றி செல்வதற்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வேறு இதர அமைப்புகள் மூலமாக கடனுதவி வழங்கபடுகின்றது.

Categories

Tech |