Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பாண்டியன் நகரில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு குழந்தையும், 1 மாத குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கரேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |