Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க கோரி அல்வா செய்து நூதன போராட்டம்….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அல்வா கிண்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அந்நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க கோரி மதுரை கோபத்தூர் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக போராட்டக் களத்தில் அவர்கள் அல்வா செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

Categories

Tech |