உங்களுக்கு வெள்ளை படுதல் பிரச்சனை இருந்தால் அதை இயற்கையாக நம் வீட்டிலேயே எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தற்போதைய காலகட்டம் மருத்துவத்துறை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் ஒரு காலத்தில் சித்த மருத்துவமே பிரபலமாக இருந்தது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்பட்டது. அத்திப்பழத்தின் பலன்கள் இப்போது பலரும் உணர்ந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நம் உடம்பில் நீண்ட நாள் தீராத புண்கள் இருந்தால் அதற்கு அத்தி மரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி பொடி செய்து அந்த பொடியை நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதை சிறிது மண்சட்டியில் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும் இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது, புண் இருக்கும் இடத்தில் ஊற்றி அதனை கழுவி பிறகு மருந்து போடவும். அப்படி போடும்போது நன்கு குணமாகும். பெண்களுக்கு முக்கியமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிக அளவில் இருக்கும். இவர்களுக்கு அத்திப்பட்டை நல்ல பயன்தரும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை கருவேலம் பட்டை, நறுவல்லி பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து 50 மில்லி அதில் போட்டு கொதிக்கவைத்து இறக்கவும். இளம் சூடாக்கி அதனை சாப்பிட்டு வந்தால் நன்கு குணமாகும். வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் போது பெண்களும் அத்தி மரப்பட்டையை அதிக அளவில் பயன்படுத்தலாம். அத்தி மரப்பட்டையை சிறிதளவு எடுத்து அதில் பசுமோர் விட்டு உரலில் இடித்து அதனை சாறு எடுத்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.