Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற பெண்கள்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் தீவிர விசாரணை…!!

கோவில் திருவிழாவிற்கு சென்ற 2 பேரின் தங்க சங்கிலி காணமல் போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவை பார்ப்பதற்காக கன்னிராஜபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் பொன்னுதுரை என்ற மூதாட்டி அவரது பேத்தியுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலி கூட்டநெரிசலில் திடீரென மாயமாகியுள்ளது.

இதுகுறித்து மூதாட்டி சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே அதே கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிந்தாமணி என்ற பெண்ணின் 4 பவுன் தங்க சங்கிலி திருடு போனதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் 2 வழக்குகளையும் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |