Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”சேமிப்பு பணம் செலவாகும்” பெண்கள் பேச்சால் வெல்வீர்கள் …!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்க கூடும். செயல்களில் சுறுசுறுப்பை பின்பற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். இன்று தொழில் பிரச்சனை , கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் நன்மை உண்டாகும். கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்படும். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். கலைத் துறையைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சிறப்பாகவே இருக்கும். பழைய பாக்கிகளும் வந்துசேரும். இன்று தன வரவை பொருத்தவரை எந்த வித பிரச்சனைகளும் இருக்காது. அதே போல் மாலை நேரங்களில் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள்.

இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று முக்கியமான பணி மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு அனைத்து விதமான சிறப்பையும் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |