மும்பை ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வெளியூர்களிலிருந்து தலைநகரான சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. சென்னை மட்டுமல்லாது பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவ்வாறு வரும் மக்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு இருக்கின்றது? எது சிறந்த நகரங்களின் பட்டியல்? என்று ஐஐடி ஆராய்ச்சியை மேற்கொண்டது.
பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான இடத்தில் பாட்னா கடைசி இடத்தில் இருக்கின்றது. மொத்தம் 14 பிரிவுகளில் மும்பை முதலிடத்திலும், டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் மும்பையும், போக்குவரத்து வசதியில் டெல்லியும், கல்வி வளர்ச்சியில் பாட்னாவும் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.