Categories
உலக செய்திகள்

லாட்டரியில் £110m வென்ற அதிர்ஷ்டசாலி…. யாரென்று தெரியவில்லை…. வெளியான அறிவிப்பு..!!!

பிரிட்டன் நாட்டில் லாட்டரியில்  £110m யூரோ மில்லியன் தொகையை வென்ற நபர் யார்? என்று தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரிட்டன் நாட்டில் நேற்று 07,12,13,20, 45, 03 மற்றும் 12 என்ற அதிர்ஷ்ட எண்களை உடைய டிக்கெட்டை வைத்திருக்கும் நபர், £110m யூரோ மில்லியன்கள் பரிசு தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நேஷனல் லாட்டரி கேம்லாட்டினுடைய ஆலோசகராக இருக்கும் ஆண்டி கார்ட்டர் கூறியதாவது, லாட்டரி டிக்கெட் வாங்கிய வீரர்கள் தங்கள் டிக்கெட்டுகளில் இருக்கும் எண்களை சரியாக பார்த்துவிட்டு அதிர்ஷ்ட எண்களுடன் பொருந்தினால் இன்று இரவு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், £110m யூரோ மில்லியன் ஜாக்பாட் தொகையை யார் வென்றது? என்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, பிரிட்டனை சேர்ந்த 15 வீரர்கள் தான் அதிகமான ஜாக்பாட்டை பெற்றிருக்கிறார்கள்.

Categories

Tech |