மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று கோபத்தை தவிர்த்து காரியத்தை நிதானமாக செய்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே பேசவேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியூர் பயணத்தின் பொழுது கவனமாக இருங்கள். கடந்த காலத்தைவிட இன்று கூடுதலாக வருவாய் இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான செயல்களால் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. உறவினர் வகையில் பணம் செலவு செய்ய நேரிடும். சத்து மிகுந்த உணவு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். இன்று மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது.
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய அறிவு திறமை இன்று கூடும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம், நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். இன்று தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று முக்கியமான செயல்கள் நிறைவேற அனுகூலமான சூழ்நிலை அமைந்து விடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.
புத்தி சாதுரியம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பேசி, அதன் பிறகு செய்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கோபத்தை குறைப்பது நல்லது. திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
கடக ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான செயல் நிறைவேற நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். கஷ்ட காலகட்டத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். உங்களின் கஷ்ட சூழ்நிலையை மட்டும் பிறரிடம் சொல்லாமல் இருங்கள் அது போதும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பண வரவுதான் இன்று கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வர தாமதம் ஆகலாம்.இன்று மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.
அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாக நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை மற்றவர்கள் பேசுவதை உற்று கவனித்து அதற்கு ஏற்றார்போல் பதில் கூறுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். அதாவது ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் நன்மை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி வளம்பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப் பொருள்களை கொடுப்பார்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும், வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை.
தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். கூடுமானவரை எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினப்பட்டு படிக்கவேண்டும்.
கடினப்பட்டு பாடங்களைப் படியுங்கள் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே….!! இன்று மனதில் பொறுமை எண்ணம் நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த இடையூறு விலகி செல்லும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். குற்றச்சாட்டுக்கு இன்று ஆளாக நேரிடும். இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். மற்றவர்களின் செய்கையால் கோபம் கொஞ்சம் ஏற்படலாம்.
நிதானம் இருக்கட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும்.அதன் மூலம் நல்ல வருமானங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். செய்கின்ற வேலையில் நேர்த்தியான சூழல் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. சரியான முன்னேற்றம் இருக்கும்.
கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே…!!! இன்று எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். சேமிப்பு பணம் செலவிற்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் நம்பிக்கையை கொடுக்கும். பணியாளர் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். ஆதாயம் சிறப்பாகவே கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு சந்தோசமும் நிலைத்து இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இருந்தாலும் படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத சங்கடம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு கூடும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் செய்வீர்கள். இன்று வேலை செய்யும் இடத்தில் மனவருத்தம் ஏற்படும் படியாக சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளரிடம், நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மையைக் கொடுக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அணுகுமுறையோடு அணுகுங்கள். இன்று மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். கூடுமானவரை கல்வியில் நீங்கள் ஆர்வத்தை மேற்கொள்ளுங்கள்.
படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள் சிறப்பாக இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களிடம் சிலர் அனுகூலத்தைப் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முக்கியமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். அதே போல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் இன்று ஓரளவே வெற்றி இருக்கும். ஆகையால் எதை செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையோடு நிதானமாக செய்வது நல்லது.
ரொம்ப முக்கியமான காரியங்களை பெரியோரிடம் கேட்டு ஆலோசித்து செய்யுங்கள். மிகவும் சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
மகர ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். அக்கறையுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் பணவரவு மூலம் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். எதையும் யோசித்து செய்வது மட்டும் நன்மையை கொடுக்கும்.
கோபமாக பேசுவதை தவிர்த்து விட்டு நிதானமாக பேசி செயல்படுவதுதான் காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதே போல மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் இன்று நீங்கள் பஞ்சாயத்தும் சொல்ல வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். அதே போல குடும்பத்திற்கு தேவையான பொருள்களையும் இன்று நீங்கள் வாங்க கூடும்.
இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபட்டால், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
கும்ப ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத கவலை உருவாகலாம். வாழ்வியல் சிரமம் சரி செய்ய நண்பரின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிக பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகரமான அளவில் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். இன்று வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடும், கவனமாக இருங்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சிரமங்கள் ஏற்படலாம்.
அதற்கு இடம் கொடுக்காமல் நடந்துகொள்வது நன்மையை கொடுக்கும். கூடுமானவரை பொறுமையுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். நீங்கள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன்களும் வாங்க வேண்டாம். அதேபோல் புதிய முயற்சிகள் ஏதாவது செய்வதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாகவே செய்யுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை.
சரியான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை கொஞ்சம் எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்
மீன ராசி அன்பர்களே…!!! இன்று செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேறுவதில் கூடுதல் உழைப்பு அவசியம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை செலவு அதிகரிக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும் பொழுதும், வாகனத்தில் செல்லும்போதும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். கூடுமானவரை நிதானத்தை இன்று மேற்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். கல்வியில் நல்ல ஆர்வம் அவர்களுக்கு மிகுந்து இருக்கும். இன்று சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்,
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்