Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு அதிஷ்டம்… யாருக்கு லாபம்… முழு ராசி பலன் இதோ..!!

மேஷராசி அன்பர்களே…!!  இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சியில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று மாமன் மைத்துனன் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். அதே போல மனம் மகிழ கூடிய சம்பவங்களும் நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்று மரியாதையும் அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி ஏற்படும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். பணவரவிற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லை, சரியான முறையில் போகும்.

ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் மே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். பணியாட்கள் தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். இன்று பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலைப்பளு, வீண் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும்.

குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும். இன்று கலகலப்பான சூழலும் காணப்படும். பொருளாதாரம் உயரும். பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய வார்த்தைக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று இன்பங்கள் வந்து சேர இறைவனை வழிபட வேண்டிய நாளக இருக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல், இன்று புதியதாக வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கு. உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும்.காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கு. இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

இன்று வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை நடைபெறக்கூடும். செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும் பொழுது, தீ மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். இன்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சனையும் இல்லை. சுமுகமாகவே இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதே போல கடன்கள் மட்டும் இன்று வாங்க வேண்டாம்.

இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

 

கடக ராசி அன்பர்களே…!!!  இன்று ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாளாக இருக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும். காரியங்களை சாதித்துக் காட்டும் வகையில் சூழ்நிலையும் இருக்கும். செய் தொழிலில் லாபம் கூடும். செல்வாக்கு உயர வழி வகுத்துக் கொள்வீர்கள். இன்று பொருள் சேர்க்கை ஏற்படும். அதேபோல் மாணவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லவும்.

எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. பாடங்களை படிக்கும்போது திட்டமிட்டு படியுங்கள், அப்போது தான் வெற்றிக்கு வழிவகுக்க முடியும். ஆசிரியர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல உறவு கிடைக்கும். குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரிடமும் இன்று கடன்களை வாங்காதீர்கள்.

வெளியூர் பயணம் சிறப்பை கொடுக்கும், புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

 

சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். நாணய பாதிப்புகள் அகலும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும், கவனம் இருக்கட்டும். சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தைக் கடைப்பிடித்து, இன்று பொறுமையை கடைபிடித்து காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை யாரிடமும் செய்ய வேண்டாம்.

யாருக்கும் பஞ்சாயத்துக்கள் எதுவும் பண்ண வேண்டாம். கூடுமானவரை இன்று பொறுமையை கையாளுங்கள். வெளியூர் பயணம் செல்லும் பொழுது மற்றவரிடம் பேச்சு கொடுப்பதை தவிர்ப்பதும், புதிய நபர்களை சந்திப்பதும் கொஞ்சம் நீங்கள் கவனமாகவே இருக்க வேண்டும். இன்று வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். இன்று வாகன யோகமும் இருக்கு. இருந்தாலும் புதிய முயற்சியை மட்டும் இன்று கைவிட வேண்டாம். இன்று மனசுக்கு குழப்பங்கள் ஏற்படக் கூடிய சம்பவங்கள் நடக்கும். தீர ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுங்கள் அது போதும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிக்கலான சூழ்நிலை இருக்கும். குழப்ப நிலை காணப்படும். இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், நீங்கள் படித்த பாடத்தை சிறப்பாக படியுங்கள், எழுதிப் பாருங்கள், நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். மனக்கலக்கம் விலகிச்செல்லும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உங்கள் ஆலோசனையை கேட்டு மற்றவர்கள் உங்களை தேடி வரக்கூடும்.

சகோதரர்களால் நன்மை ஏற்படும். மனதில் உறுதி இருக்கும். பிள்ளைகள் உடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் இருந்த லாபம் உங்கள் கையில் வந்து சேரும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை, அமைதியாக இருக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும். அன்பும் இருக்கும். இன்று மாணவர்களுக்கும் கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் சரி படித்த பாடத்தை நீங்கள் எழுதிப் பாருங்கள்.

நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் கூட நல்ல வெற்றி இருக்கும். ஆடை, ஆபரணப் பொருள்கள் சேரும். அதேபோல் புத்தாடைகள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும், முன்னேற்றமும் ஏற்படும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள் அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.

இன்று பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் கொஞ்சம் தாமதப்படும் பின்னர் தான் சரியாகும். கூடுமானவரை பொறுமையை இன்று விட்டுவிடாதீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். சிறப்பாகவே இருக்கும். செய்கின்ற காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.

இன்று கூடுமானவரை செய்யும் காரியங்களை யோசித்து செய்யுங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

 

விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். உங்களுடைய திறமை பளிச்சிடும். தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும். திடீர் வரவு உண்டாகும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று கடன் பிரச்சனைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும்.

பிள்ளை களிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் இருக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவது தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பணம் தர வேண்டியவர் வீடு தேடி வந்து தருவார்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். கல்யாணம் முயற்சி கைகூடும். இன்று அந்நிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள். நண்பர்களிடம் பழகும்போது எச்சரிக்கை இருக்கட்டும்.

கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும், கூடுமானவரை பொறுமையை கடைபிடியுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அதேபோல இன்று நீங்கள் பஞ்சாயத்து ஏதும் சொல்ல வேண்டாம். பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள். உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல நட்பு மத்தியில் நீங்கள் ஓரளவு மதிக்கப்படுவீர்கள். அவர்களிடம் பேசும்பொழுது வீன் விதமாக பேச வேண்டாம்.

இதை நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

மகர ராசி அன்பர்களே…!! இன்று ஆனந்தமான வாழ்க்கைக்கு இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் கூடும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இன்று கடன் கொடுப்பதில், பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். எதிலும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

அவசரப்படாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபங்கள். இன்று பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் அமைதியாக இருக்கும். அதே போல சொந்த பந்தங்கள் இடம் பேசும்பொழுது நிதானம் அவசியம். உறவினர் உங்களுக்கு ஓரளவு உதவிகரமாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். கொடுக்கல் வாங்கலும் கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது. பணம் பரிவர்த்தனையின் பொழுது கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

யாருடைய பணத்திற்கும் பொறுப்பேற்காமல் இன்று இருப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

 

கும்ப ராசி அன்பர்களே…!! இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வரங்கள் வந்து வாயில் கதவு தட்டும். நல்ல செய்தி ஒன்று தூரதேசத்தில் இருந்து வந்து சேரும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது ரொம்ப கவனமாக விளையாட வேண்டும்.

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை இன்று நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பை கொடுக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்

 

மீன ராசி அன்பர்களே…!!! இன்று நீங்கள் இறைவனை வழிபட்டு எந்த காரியத்தையும் மேற்கொள்ளவேண்டும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது மட்டும் இன்று நன்மையை கொடுக்கும். அதே போல உங்களுடைய வேலைகளை நீங்கள் கவனமாக செய்வது நல்லது. எதிலும் நிதானம் இருக்கட்டும். உங்களுக்கு வருமானம் இன்று நல்லபடியாகவே வந்து சேரும்.

வசதி வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்களுடன் சுமுக நிலையே காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல நேரிடும். உங்களுடைய மனசுக்கு ஏற்றார் போல் இன்று வரங்கள் வந்து அமையும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை கலகலப்பான சூழல் காணப்படும். இன்று சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். அதேபோல அக்கம்பக்கத்தினரின் அன்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பணமும் கையில் வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |