Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு அதிஷ்டம்… யாருக்கு லாபம்… முழு ராசி பலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று செயல்களில் தேவையான சீர்திருத்தம் வேண்டும். பொறாமை உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு கூடும். நேரத்திற்கு உணவு உண்டால் ஆரோக்கியம் சீராகும். இன்று வீண் அலைச்சல், டென்ஷன் கொஞ்சம் ஏற்படக்கூடும். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டு பின்னர் முடியும்.

உடல் பலவீனம் கொஞ்சம் உண்டாகலாம். திருமணம் முயற்சிகள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் சுமூகமும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் இன்று பணம் மட்டும் நீங்கள் கடனாக வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். புதிய முயற்சிகளும் வேண்டாம். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்றும் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே..!!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்யுங்கள். பணவரவு சுமாராக தான் இருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். இன்று மனகஷ்டம், பணம் கஷ்டம் தீரும். அதே போல சிலருக்கு வசதியான வீடு அமையும்.

எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம் தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது, கொஞ்சம் கவனமாக மேற்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கூட ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானமாகவே பேசுங்கள். இன்று முற்றிலும் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!!  இன்று கடந்தகால நல்ல செயலுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். அவமதித்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்துமே திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல்தான் இருக்கும்.பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மேல் இடத்தை அனுசரித்து செல்வது நல்லது. இன்று வீண் அலைச்சலும், வேலைப்பளுவும் ஏற்படக்கூடும். இன்று மாணவர்கள் விளையாட்டை ஏறக்கட்டி விட்டு, பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

 

கடக ராசி அன்பர்களே…!! இன்று நண்பரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிறு குறுக்கீடுகள் வரலாம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் எல்லா காரியங்களும் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகள் வழியில் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம், அவர்களிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள்.

மற்றவர்களுடன் வீண்வாதம் இருக்கும். கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

 

சிம்ம ராசி அன்பர்களே..!!! இன்று சிறிய செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாமன் மைத்துனன் இயன்ற அளவில் உதவிகளை செய்வார்கள். சுற்றுலா சென்றுவர பயணத்திட்டம் உருவாகும். இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றியைக் கொடுக்கும்.

மனக்குழப்பம் நீங்கும். தைரியம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். அது மட்டும் இல்லாமல் திருமணம் தொடர்பான முயற்சிகள் நல்லபடியாகவே நடக்கும். வாழ்க்கையை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து செல்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்றைய நாள் அனைத்து விஷயமுமே படு சூப்பராக இருக்கும்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக  உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று உங்களுடைய நல்ல செயல்களுக்கான பாராட்டுகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை பயன்படுத்துவது நல்லது. கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத அழகு சாதன பொருட்களை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். எங்கும் எதிலும் நன்மையே உங்களுக்கு இன்று கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

மனம் நிம்மதி இருக்கும், சந்தோசம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் சிறப்பாக நடைபெறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் இன்றைக்கு சிறந்து விளங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் பேசும்பொழுது நிதானத்தை கடைப்பிடியுங்கள். அது எந்த இடம் என்பது உங்களுக்கு சரியாக தெரியும்.

ஆகையால் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று உறவினரின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணிகளை புதிய யுக்திகளை மிக கச்சிதமாக செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படலாம். உபரி பணவரவு பெறுவீர்கள். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி, நிம்மதியாக தூக்கம் வரும். மனதில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள் வந்து செல்லும். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்போதும் போலவே நீங்கள் சந்தோசமாகவே காணப்படுவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

 

விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று பரந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்திட சில மாற்று உபாயம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தந்தைவழியில் உறவினர்களால் நன்மை ஏற்படும். இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும்.

தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இன்று தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் இன்று மதிப்பு கொடுப்பார்கள். இன்று அனைத்து விஷயமுமே சிறப்பாக இருக்கும். ஆனால் மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை, தாமதம் இருக்கும். கூடுமானவரை கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே..!!! இன்று தேவையற்ற விவாதத்தை யாரிடமும் பேச வேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சி பெற சாதக சூழ்நிலையை அறிந்து கொள்வது அவசியம். சராசரி பணவரவு தான் இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும். இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி, ஒற்றுமை உண்டாகும்.சக ஊழியர்கள் மூலம் நன்மை பெருகும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாகவே இன்று முடியும். உங்கள் மீது அனைவரும் மதிப்பும் மரியாதையும் செலுத்துவார்கள். இன்று நீங்கள் மிக முக்கியமாக கடன் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். இந்த விசயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும்.

நல்ல உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

மகர ராசி அன்பர்களே…!! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். அளவான பணவரவு இருக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பு நம்பிக்கையை கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதியும் இருக்கும்.அது மட்டுமில்லாமல் எதிர்ப்புகள் விலகி செல்லும்.

தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் சரியாகும். அதேபோல் வியாபாரம் வளர்ச்சியைக் கொடுக்கும். ஏற்றுமதி துறையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று ஆதாயம் உங்கள் வாயில் கதவை தட்டும். கூடுமானவரை நீங்கள் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல தேவையில்லாத விஷயத்திற்காக பயப்படவேண்டாம்.குடும்பத்தைப் பொறுத்தவரை இன்று எந்த பிரச்சனையும் இல்லை.

ஒற்றுமை மேலோங்கும். அன்பு நீடிக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

கும்ப ராசி அன்பர்களே…!!! இன்று உங்களின் இன்பதுன்பம் பிறர் அறியாத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி பெற புதிய திட்டம் உருவாகும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வீடு வாகனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து இருக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கு மேலிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரக்கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும்.உங்கள் உள்ளத்தில் அன்பு அதிகமாகவே இருக்கும். அதே போல இன்று வெளியூர் பயணங்கள் செல்வதாக இருப்பின் பொருள்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். பயணம் செய்யும்பொழுது தூங்காமல் செல்லுங்கள். இன்று கணவன்-மனைவிக்கிடையே எந்தவித பிரச்சினையும் இல்லை, அன்பு நீடிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிரமமான சூழல் நீங்கும்.

ஆசிரியர்களின் உதவியும் கிடைக்கும்.சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

 

மீன ராசி அன்பர்களே…!!!  இன்று இஷ்ட தெய்வ அருளால் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். உபரி பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். ஆனால் வாகனத்தில் செல்லும்போது, இயந்திரங்களை கையாளும் பொழுதும், தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக செயல்படுங்கள்.

பணமிருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை இருக்கும். யாரைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். யாருக்காகவும் எந்த ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவிகளை செய்யும் பொழுது, ரொம்ப கவனமாக செய்யுங்கள். அந்த நபரை பற்றிய விசாரணையுடன் அந்த காரியத்தை மேற்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை.

சிறப்பான முன்னேற்றத்தை அவர்கள் அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்ட நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |