இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘மகான்’ திரைப்படம் குறித்து தலைவர் ரஜினி காந்த பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் பீமா, ஜெமினி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராக்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள படம் மகான். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
"Excellent movie … Superb Performances …. Brilliant "
Yes…. Thalaivar loveeeed #Mahaan 😍😍
Thanks for your call Thalaivaaa….. 🙏🏼🙏🏼
We are Elated!!#ThalaivarLovedMahaan#MahaanOnPrime #MahaanStreamingNow pic.twitter.com/xTBjZCI3Oe
— karthik subbaraj (@karthiksubbaraj) February 11, 2022
இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘மகான்’ திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு தொலைபேசி மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “சிறந்த படம்… சிறந்த நடிப்பு… புத்திசாலித்தனமான திரைக்கதை என்றும் அவருக்கு இந்த திரைப்படம் பிடித்திருக்கிறது என்றும் என்னை தலைவர் பாராட்டினார். உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா உங்களின் பாராட்டால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.