தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேசியாவில் கொரோனாவால் இதுவரை 1,252,685பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,969 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெகதா ஆளுநர் அகமத் சிசா பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஜகர்த்தாவில் வசிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மறுத்தால் 356,89 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு உதவிகள் அனைத்தும் ரத்து செய்ய செய்யப்படும். ஜகர்த்தா அதிகாரிகளும் கொரோனா விதிகளைப் பின்பற்றுவதில் கவனமாக உள்ளார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் கொரோனாவின் தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.