Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு… அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் ஒரு மர குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மரத்தினாலான பலகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த மர குடோனில்  ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டனர். இந்த தீ விபத்து குறித்து இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்ததோடு, தீ மளமளவென பரவி விட்டது. இதனையடுத்து பேரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் ஆவடி போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து அந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் தீ விபத்து ஏற்பட்டவுடன் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளவேடு போலீசார் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |