Categories
பல்சுவை

காலத்தை வெற்றி பெற்ற கலைஞரின் முத்தான பொன்மொழிகள்…!!

  • தேன் கூடும் கஞ்சனின்  கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
  • உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான்.
  • குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்.
  • மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
  • புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும்.
  • மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும்.

  • இழிவு செய்யும் நண்பர்களை விட எதிர்த்து நிற்கும் பகைவன் எவ்வளவோ மேல்.
  • முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்னால் வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்.
  • தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை. அதைப் போன்ற ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
  • ஆசைகள் சிறகு ஆகலாம் அதற்காக கால்களை இழந்து விட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.
  • சிரிக்கத் தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்.
  • கண்ணீரில் மலரும் காதல் சேற்றில் வளரும் செந்தாமரை யாக காட்சி தருவதும் உண்டு.
  • துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு தூக்கமில்லை.

Categories

Tech |