சரக்கு ரயிலில் சிக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முத்துராஜ் ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் முத்துராஜ் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.