Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள்…. நிலையற்ற தன்மையில் கொரோனா…. தகவல் வெளியிட்ட பிரபல நிறுவனம்….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக கூகுள் நிறுவனம் அவர்களது ஊழியர்களை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா அனைத்து நாடுகளிலும் ஒரு நிலையற்ற தன்மையாக இருந்துவருகிறது. இதனால் ஏற்கனவே கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வரை கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா தொற்றின் பரவலை முன்னிட்டு கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை கூகுள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் மேல் குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகும் கொரோனாவின் தாக்கத்தைப் பொறுத்து கூகுள் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் வரலாமா அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாமா என்பதை நிறுவனம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூகுள் நிறுவனத்தின் இந்த செயல் பிற பெரு நிறுவனங்களான ஃபேஸ்புக், ஆப்பிள் போன்றவைகள் அறிவித்த திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளது.

Categories

Tech |