Categories
தேசிய செய்திகள்

“WORK FROM HOME”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்..15 வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 3 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணி செய்வதற்கான அனுமதி  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 50 சதவீத மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வழிமுறையின்படி ஒரே நேரத்தில் அலுவலகத்தில் ஊழியர்கள் குவிவதை தடுக்க வேலை நேரங்கள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி காலை 9 -5.30 மணி வரை, 10- 6.30 மணி என அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.

அதன்பின் அரசு அலுவலகத்துக்கு வராத மீதம் உள்ள 50 சதவீத ஊழியர்கள் எப்போதும் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகிறார்கள். மேலும் தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாக அலுவலகங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அரசு தெரிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்த நிலையில் தற்போது இது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |