கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து பலரும் தங்களுடைய வீடுகளில் இருந்தே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இதற்காக பல நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான அளவு சம்பளத்தையும் கொடுத்து வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்கள் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. அவ்வாறாக பெயர் குறிப்பிடாத நிறுவனமொன்று டேட்டா என்ட்ரி வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேர்வு செய்கிறது. பின்னர் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தி நீங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட 90 சதவீதம் அதிகமாக நல்ல வேலை செய்கிறீர்கள்.
எனவே 50ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கிறோம். ஆனால் நிறுவனத்தின் விதியின்படி முதலாவதாக 5,000 ரூபாயை நீங்கள் எங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு 50ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதை நம்பி சிலர் அந்த கம்பெனியின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளனர். ஆனால் இதில் உஷாராக இருந்தவர்கள் என்னுடைய சம்பளத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுவனம் அது எங்களுடைய கம்பெனியின் விதி கிடையாது என்று கூறி ஏமாற்றியுள்ளது. ஆனால் அவர்கள் கம்பெனியின் மோசடியை யூடியூப் நிறுவனத்திடம் கூறியுள்ளனர். இதையடுத்து யுடியூப் நிறுவனம் தகுந்த ஆதாரத்துடன் இந்த மோசடியை வீடியோவாக வெளியிட்டு உள்ளது.