போர்ச்சுக்கலில் Work From Home தொழிலாளர்களுக்குரிய புதிய சட்டமானது அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வது பயண நேரத்தை சேமிக்க உதவியது. ஆனால் அதேசமயம் தொழிலாளர்களுக்கு பணி நீட்டிக்கபடுவதும், அலுவலக நேரத்திற்கு பிறகு முதலாளிகளிடம் இருந்து அழைப்புகள் வருவதும் அதிக சோர்வை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையில் சமநிலை குறைந்து வருகிறது. இதனை முறியடிப்பதற்காக போர்ச்சுகல் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை அவர்களின் அலுவலக நேரத்திற்கு பிறகு அழைப்பதை சட்டவிரோதமாக்கியுள்ளது. இவ்வாறு முதன் முறையாக போர்ச்சுகல் அரசாங்கமானது டிஜிட்டல் தொழிலாளர்களுக்குரிய சட்டங்களை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
எனவே எந்த ஒரு முதலாளியும் அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை அழைத்தால், நிறுவனம் பண அபதாரம் செலுத்த வேண்டும் என்று முக்கிய சட்டங்களில் ஒன்று கூறுகிறது. இதில் ஒரு ஊழியர் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது மின்சாரம் மற்றும் வைஃபை கட்டணங்கள் போன்ற செலவுகளுக்கு நிறுவனங்களைச் செலுத்துமாறு சட்டங்கள் வலியுறுத்தி உள்ளது. இவற்றில் சில சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் இணைப்பை துண்டிக்கும் உரிமை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கிறது. ஆகவே வேலை நேரத்திற்குப் பிறகு அனைத்து பணி சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை அணைக்கும் உரிமை போன்றவை சட்டம் இயற்றுபவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்வதில் பலன்கள் இருந்தாலும், ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க ஊழியர்களுக்கு உதவும் முறையான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த புதிதான விதிகள் உலகம் எங்கிலும் அதிகரித்து வரும் பணியில் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தின் நேரடியான பிரதிபலிப்பாகும். இது மற்ற நாடுகளை சேர்ந்த மக்களை போர்ச்சுக்கலில் வேலை தேடுவதற்கு ஈர்க்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. அதிலும் குறிப்பாக தொற்றுநோய்களின் போதும் இது ஈர்க்கப்பட வேண்டும் என நினைக்கிறது. இதுகுறித்து லிஸ்பனில் இணைய உச்சி மாநாட்டில் போர்ச்சுகலின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் Ana Mendes Godinho கூறியபோது “இந்த டிஜிட்டல் நாடோடிகள் மற்றும் தொலைதூரத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக அந்நாட்டை நாங்கள் கருதுகிறோம். இதனால் நாங்கள் அவர்களை போர்ச்சுகலுக்கு ஈர்க்க விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.