Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரம்!

செங்கல்பட்டில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்து உள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. போலீசார் பாதுகாப்பில் பாதுகாப்பாக சரி செய்யும் தற்போது நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |