ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பால தண்டாயுத நகர் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்தூர் பகுதியில் கார் டிங்கரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கி தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு இசக்கி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இசக்கி தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அவரது வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மர்மநபர்கள் குழந்தைகளின் பள்ளி பையில் வைத்திருந்த ரூ.200 மற்றும் 4 குடங்களில் இருந்த தண்ணீர் ஆகியவற்றை எடுத்து வீட்டில் ஊற்றியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.