Categories
அரசியல் மாநில செய்திகள்

அயராமல் உழைக்காரு… சோர்வின்றி உழைக்காரு… சலிப்பின்றி உழைக்காரு… ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்ன தவம் செய்தோம் என்று நீங்கள் தலைப்பிட்டீர்கள் ? அதை படித்த போது எனக்கு வள்ளுவன் ஐயனின் குறள் நினைவுக்கு வந்தது,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – என திருக்குறளை குறிப்பிட்ட திருமா,
அப்பாவுடைய கடமை என்ன ? மகனை அவைக்கு முந்தி இருப்பச் செயல். அதை செய்து முடித்து விட்டார். அவைக்கு முந்தியிருப்பேன் என்றால்,  நான் அவைக்கு தலைமை தாங்குகின்ற, இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்ற ஒன்றை செய்து முடிக்க வேண்டும். கலைஞர் தன் கடமையை சிறப்பாக செய்தார் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் இன்றைக்கு மகன் இவருடைய தந்தை என்ன தவம் செய்தாரோ, இவர் பெற்றோர் என்ன தவம் செய்தாரோ என்று சொல்லத்தக்க வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அதைத்தான் இங்கே தலைப்பாக வைத்துள்ளீர்கள்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

என்நோற்றான் என்ற சொல் – என்ன பொருள் என்றால் ? என்ன வகையான நோன்பை இருந்தாரோ..  நோன்பு என்றால் தவம் என்று சொல், நோற்றல் என்பது நோன்பு இருத்தல் என்று பொருள், நோன்பு இருத்தல் என்றால் தவம் இருத்தல் என்று பொருள். என்ன தவம் செய்தான் ? என்பதை தான் ஐயன் திருவள்ளுவன் என்நோற்றான் கொல்எனும் சொல். எத்தகைய தவம் செய்தாரோ,  அவருடைய தந்தை..  இவனை இந்த நிலைக்கு ஆளாக்குவதற்கு, ஆற்றல் வாய்ந்தவனாக வளர்த்தெடுப்பதற்கு, இப்படிப்பட்ட பிள்ளையை வாரிசாக பெறுவதற்கு…

அதை இன்றைக்கு யாரும் ஐயன் வள்ளுவனின் கூற்றைப் பார்த்து செய்யாமல், இயல்பாகவே இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்று நீங்களே சொல்லக்கூடிய அளவிற்கு, அதை எண்ணி  பெருமைப்படக்கூடிய அளவிற்கு,  தளபதி அவர்கள் கடுமையான நெருக்கடிகளை கடந்து வந்து, அயராமல் உழைத்து, சோர்வின்றி உழைத்து, சலிப்பின்றி உழைத்து, கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |