தினேஷ் கார்த்திக் வெளியிட்ட இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து தோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்தியாவுக்காக டி20 உலக கோப்பை தொடரை விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்ததாகவும் அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்ததாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தாரா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.