Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நம்ம நாட்டுக்கு வந்த பெண்ணிற்கு… நிகழ்ந்த கொடூர சம்பவம்… கைது செய்த காவல்துறையினர்…!!

பெண்ணை பலாத்காரம் செய்து அவரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் கோயிலில் 30 வயதுடைய பெண் ஒருவர் தலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருந்தவர்கள்  அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையெடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் பெங்களூருவில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் எனவும் இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இதில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்கள் அவரிடம் 10, 000 ரூபாய் கடனை பெற்று விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தன்னிடம் கடன் வாங்கியவர்கள் இம்மாவட்டத்தில் இருப்பதாக அவருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் பேருந்தில் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு வந்துள்ளார். பிறகு அங்கிருந்து மினி லாரியில் இரவு நேரத்தில் திருக்கோவிலூருக்கு வந்துள்ளார். இதில் அவருடன் தொழிலாளி கப்பல்துரையும் மற்றும் 2 பெண்களும் உடன் வந்துள்ளனர். பின்னர் கப்பல்துரை  அந்த வடமாநிலம் பெண்ணிடம் இந்த சமயத்தில் இங்கே வாகனங்கள் எதுவும் வராது எனவும் தன் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு நாளை செல்லலாம் என கூறி தனது கிராமத்துக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் திரும்பவும் அதிகாலை அளவில் மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த போது அந்த பெண் மறுத்ததால் கோபமடைந்து கப்பல் துரை அப்பெண்ணின் தலையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து ஓங்கி அடித்துள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த அவர் மயங்கிக் கீழே விழுந்ததும் கப்பல்துரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு சிறிது மயக்கம் தெளிந்ததும் அப்பெண் அருகில் இருந்த கரும்பு தோட்டம் வழியாக நடந்து சென்று கோவிலில் வந்து மயங்கி விழுந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கப்பல்துரையை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர் குடும்ப தகராறில் ஏற்கனவே தனது மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் கப்பல் துரை மீது கொலை வழக்கு ஒன்று இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |