Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த துக்கத்தால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி குடிப்பழக்கத்தை விட சொன்னதால் மன உளைச்சலில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புக்கிரவாரி  பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கமுடைய சின்னதுரை மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு வெண்ணிலா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திருமங்கலத்தில் இருக்கும் அவரின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்த போது மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் தான் நான் வருவேன் என அவர் கூறி அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சின்னதுரை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |