மனைவி திட்டிய வருத்தத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உ ள்ள பிரிதிவிமங்கலம் காலனியில் கூலி தொழிலாளியான சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையான சின்னதுரை தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபம் அடைந்த மனைவி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சின்னத்துரைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.