Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனமா வேலை பார்க்க கூடாதா… திடீரென நடந்த துயர சம்பவம்… தனியாக தவிக்கும் குடும்பம்…!!

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் தெற்கு மாடவீதி தெருவில் ராஜேந்திரன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்மிங் மற்றும் சைக்கிள் பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால் நாயுடு தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியில் குழாய் அமைக்கும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |