சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி. துறிஞ்சிபட்டி பகுதியில் தொழிலாளி சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடசந்தையூரிலிருந்து பொம்மிபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது துறிஞ்சிபட்டி மின்சார வாரியம் அலுவலகம் முன்பு வந்து கொண்டிருக்கும் போது திடிரென நிலை தடுமாறிய சுரேஷின் மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த போர்வெல் பைப் மீது மோதிவிட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.