மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் துரைப்பாக்கத்தில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பட்டு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் மனைவி பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஆனால் படுகாயமடைந்த சாமிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த சாமிக்கண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.