திருமணமாகாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெலாகாம்பூண்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பாலாஜிக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலாஜி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன்னனை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் உள்ளவர்கள் பாலாஜியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.