Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சோகம் : 4 குழந்தைகள், மனைவியை கொலை செய்த தொழிலாளி… தானும் தற்கொலை… ஒரே இடத்தில் 6 பேர் அடக்கம்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி-வள்ளி தம்பதியினருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இதில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சௌந்தர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகின்றது.

இதனால் மனமுடைந்த வள்ளி தனது கணவரை அழைத்துக் கொண்டு செங்கம் அருகே இருக்கும் ஒரு சாமியாரிடம் கழிப்பு கழித்து தாயத்து கட்டி இருக்கின்றார். இந்நிலையில் பழனி சம்பவத்தன்று தனது மனைவி வள்ளி, மகள்கள் மோனிஷா, த்ரிஷா, தனுசு, பூமிகா மகன் சிவசக்தி உள்ளிட்டோரை வெட்டிவிட்டு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அனைவரும் உயிரிழந்த நிலையில் பூமிகா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதன்பின் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் 6 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்விற்கு பிறகு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள்.

இறுதி அஞ்சலிக்காக அவர்களின் உடல்கள் உறவினர் வீட்டின் அருகே வரிசையாக வைக்கப்பட்டது. இறந்தவர்கள் உடலுக்கு எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சரவணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பின் ஆறு பேரின் உடல்களும் இடுகாட்டில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |