சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பரமத்திவேலூரில் இருந்து கீழ்பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக பெங்களூருவை நோக்கி பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பாண்டியன் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டியனை மீட்டு அப்பகுதி வழியாக சென்றவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.