டெல்லியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் கூடியதால் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளனர். கொரோன வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி முதல் வரை நாட்டில் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் வேலை செய்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல், பேருந்து இன்றி, உணவின்றி சாலைகளில் தங்கி நடைபயணமாக செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இதையடுத்து டெல்லியிலிருந்து லக்னோ வரை 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட தொழிலாளர்கள் நடந்து சென்ற நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, எல்லாருக்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது அதில் தங்கி கொள்ளலாம் என்று வலியுறுத்தி இருந்தார். எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய ஊருக்கு சென்று கொண்டே இருந்தனர்.
ये वीडियो हर रूप में दर्दनाक है।
●इन मजदूरों की हालत देखकर रोना आता है।
●#SocialDistancing और #Lockdown की हालत देखकर चिंता होती है।
● इनमें से कोई एक भी संक्रमित हुआ, तो अब ये #Corona रोक पाना कितना मुश्किल होने वाला है ये सोचकर डर लगता है। #CoronaUpdate #PMReliefFund pic.twitter.com/sBGEU6vu0a— Shubham Khandelwal (@shubham_2107) March 28, 2020
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் உத்திரப்பிரதேச சார்பில் டெல்லியில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து தொழிலாளர்களும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதனால் இன்று முதல் டெல்லியில் இருந்து கான்பூர், வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்க படுகின்றது. இதனையறிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்வதற்காக டெல்லியில் உள்ள அனந்த விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
Imagine if only a handful of people are corona positive
How much the virus will spread
RT if you think this government is absolutely incompetent in handling this pandemicpic.twitter.com/5ymLloWHOo
— Prime Minister Ambani (@Sharmaajei) March 28, 2020
தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு அலை அலையாக வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதன்மூலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என்னாகும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்வதற்காக உணவின்றி தங்க இடமின்றி தவித்து வந்த நிலையில் வீடுகளுக்கு செல்வதற்காக அவர்கள் பேருந்து நிலையத்தை நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
சமூக பரவல் குறித்த அச்சமோ , விழிப்புணர்வோ இன்றி, லட்சக்கணக்கானோர் குவிந்ததால் சமூக தொற்று என்ற 3ஆம் நிலை அபாயத்தை இந்தியா நெருங்குவதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.