Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

தொழிலாளர்கள் அதிர்ச்சி …. மீண்டும் வேலையில்லா நாளை அறிவித்து டிவிஎஸ்…!!

ஓசூர், சென்னையில் இயங்கிவரும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாள்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.டிவிஎஸ் (TVS) குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவருகிறது.

Image result for TVS SUNDARAM CICLON LIMITED

இந்நிலையில் அக்குழுமத்தில் ஒன்றான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் கிளைட்டன் லிமிடெட் நிறுவனம், சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது.இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக சென்னையிலுள்ள தொழிற்சாலையில் அக்டோபர் 29ஆம் முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

Related image

ஓசூரில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.ஏற்கனவே, கார், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வேலையில்லா நாள்களை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அறிவித்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களாக வேலையில்லா நாள்களை தொடர்ந்து அறிவித்துவருவதால் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |