இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் பலரும் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்காக ஆன்லைனில் வேலைகளை தேடி வருகிறார்கள். இவர்களை குறி வைத்து பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வீட்டில் இருந்தே வேலை செய்தால் மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.
வேலை தேடுபவர்கள், குடும்ப பெண்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. ஆவணங்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, பணம் பறிக்கப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.