Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை….!!

பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு  785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

பணிகள்:

அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) ,

ஜியோலஜிஸ்ட் பணி ,

கெமிஸ்ட் பணி ,

ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது.

மொத்த காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 785 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்  : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்  : 05.04.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2019 அன்று மாலை 06.00 மணி வரை

ஸ்கேன் செய்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய

வேண்டிய நாள்: 05.05.2019 முதல் 20.05.2019

நேர்முகத்தேர்வு தொடங்கும் தற்காலிக தேதி: 10.06.2019

பணியின் வயது வரம்பு :

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பில் வேறுபாடுகளும், மாற்றங்களும் உள்ளது.


தேர்வுக்கட்டணம்: 

பொது / EWS / OBC பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் – ரூபாய் 370 கட்டணம்
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwD – தேர்வுக்கட்டணம் இல்லை

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

SBI வங்கி செல்லான் மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்துவோர்,

ONGC Power Jyothi ,

A/C No. 30827318409 of SBI,

Tel Bhavan, Dehradun என்ற முகவரிக்கு செலுத்தவேண்டும்.
செலுத்திய கட்டணத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது.

கல்வித்தகுதி:

1. அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE)  பணிக்கு, குறைந்தபட்சமாக B.E  / B.TECH  பட்டப்படிப்பில் மெக்கானிக்கல், சிவில், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், இன்ஸ்ட்ரூமெண்டேசன், புரொடக்சன் அல்லது முதுகலை பட்டப்படிப்பில் இயற்பியல், ஜியோ பிசிக்ஸ் பாட பிரிவில் பயின்று குறைந்தபட்சம் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மற்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக B.E  / B.TECH / M.E  / M.TECH  / MCA  / MSC போன்ற பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்,

www.ongcindia.com

https://eapplicationonline.com/ONGCGT2019/View/Instruction01.aspx- போன்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை:

2019_இல் எழுதிய கேட்- தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் = 60 மதிப்பெண்கள் வழங்கப்படும்

கல்வித்தகுதி = 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்

நேர்முகத்தேர்வு = 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற
https://eapplicationonline.com/ONGCGT2019/Document/Advertisement_English.pdf- என்ற இணையதள முகவரிக்கு சென்று முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |